கேரளாவுக்கு விற்பனை செய்யப்படும் வைக்கோல்


கேரளாவுக்கு விற்பனை செய்யப்படும் வைக்கோல்
x
தினத்தந்தி 13 March 2023 12:30 AM IST (Updated: 13 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு வைக்கோல் விற்பனை செய்யப்படுகிறது.

தேனி

தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர் கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் ஆண்டுதோறும் இருபோக நெல் சாகுபடி விவசாயம் நடைபெறுகிறது. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இப்பகுதியில் எந்திரங்கள் மூலம் நெல் அறுவடை செய்யப்படுகிறது. அதில் நெல், வைக்கோல் என தனித்தனியாக உடனே பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த வைக்கோலை கேரள மாநிலத்துக்கு அனுப்பி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு கம்பம் பகுதில் நெல் அறுவடை பணி எந்திரங்கள் மூலம் தீவிரமாக நடந்து வருகிறது. இதையடுத்து வயல்களில் இருந்து வைக்கோல்களை கட்டுகளாக தயார்ப்படுத்தி விற்பனைக்காக கேரள மாநிலத்துக்கு விவசாயிகள் லாரிகளில் அனுப்பி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கால்நடை தீவனம் பற்றாக்குறையை போக்குவதற்கும், பல மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம் என்பதாலும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். வைக்கோலை எந்திரம் மூலம் சுமார் 30 கிலோ எடைகொண்ட கட்டுகளாக கட்டப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும் தமிழக வைக்கோலுக்கு கேரளாவில் கிராக்கியாக உள்ளதால் நல்ல விலை கிடைக்கிறது என்றனர்.

1 More update

Related Tags :
Next Story