தெரு நாய்கள் தொல்லை
அதிகரித்து வரும் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர்
அரியலூர் பூக்கார மாரியம்மன் மற்றும் கீரைக்கார தெருவில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளையும், சாலையில் நடந்து செல்லும் குழந்தைகளையும் கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் தெருநாய்கள் இரவு நேரத்தில் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொள்வதினால் இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story