6 இடங்களில் தெருமுனை பிரசார கூட்டங்கள்
ஆரணி தொகுதியில் தி.மு.க. இளைஞரணி சார்பில் 6 இடங்களில் தெருமுனை பிரசார கூட்டங்கள் நடந்தது.
ஆரணி
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பாக தி.மு.க. ஆட்சியில் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி என ஆரணி சட்டமன்ற தொகுதியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எவரெஸ்ட் என்.நரேஷ்குமார் தலைமையில் தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஏ.எம்.ரஞ்சித், ஜி.தினேஷ்குமார், எம்.சி.வெங்கடேசன், சி.ராம்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தெருமுனை பிரசார பொதுக்கூட்டங்கள் ஆரணி சைதாப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகிலும், சேவூர் ஊராட்சியில் பஸ் நிறுத்தம் அருகிலும், எஸ்.வி.நகரம் ஊராட்சியில் பஸ் நிறுத்தம் அருகிலும், குன்னத்தூர் பஜார் வீதிலும், மேல்நகர் ஈஸ்வரன் கோவில் திடலிலும், கண்ணமங்கலம் பிள்ளையார் கோவில் அருகிலும் என 6 இடங்களில் நடைபெற்றது.
இதில் தலைமை கழக பேச்சாளர் வண்ணை புகாரி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், உயர்கல்வி படிக்கக்கூடிய மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது, வரும் செப்டம்பர் 15-ந் தேதி குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதில் ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எஸ்.அன்பழகன், வக்கீல் எம்.சுந்தர், துரைமாமது, எஸ்.மோகன், மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளை கணேசன், தயாநிதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேஸ்வரி முரளி, ஷர்மிளா தரணி, ஆரணி ஒன்றியக்குழு துணைத் தலைவர் கே.டி.ராஜேந்திரன், கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், இளைஞர் அணி பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.