தெருமுனை கூட்டம்


தெருமுனை கூட்டம்
x

தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

கரூர்

தோகைமலை அருகே உள்ள நாகனூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக பா.ஜ.க. அரசை கண்டித்து தெருமுனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் முனியப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு ேபசினர்.பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும், வருகிற ஏப்ரல் மாதம் 5-ந்தேதி டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி சுமார் 10 லட்சம் பேருடன் பேரணியாக செல்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story