சாலை விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை


சாலை விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை
x

சேலம் மாவட்டத்தில் சாலை விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்தார்.

சேலம்

விபத்து

பெத்தநாயக்கன்பாளையத்தில் 6 பேர் பலியான விபத்து நடந்த இடத்தை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆத்தூர் நெடுஞ்சாலையில் ஏற்படும் சாலை விபத்துகள் குறித்து ஆராயப்பட்டு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலை விபத்துகள் அனைத்தும் சாலை விதிகளை கடைபிடிக்காமல் இருப்பதாலும், ஓட்டுனரின் அலட்சியத்தாலுமே நடைபெறுகிறது. வாகனங்களை சாலைகளில் எக்காரணத்தை கொண்டும் நிறுத்தி வைக்கக்கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

எச்சரிக்கை

எனவே, ஒவ்வொருவரும் சாலை பாதுகாப்பு குறித்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். சாலை விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சாலைகளில் வாகன ஓட்டிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் தேவையான இடங்களில் எச்சரிக்கை பலகைகளை அமைத்திடவும், வேகத்தடைகள், மின் விளக்குகள் மற்றும் பாலங்கள், வளைவுகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சாலைகளின் முன்னே செல்லும் வாகனங்களை முந்தி செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்திடவும், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.


Next Story