மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தில் 'செல்பி' எடுத்தால் கடும் நடவடிக்கை - போலீசார் எச்சரிக்கை


மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தில் செல்பி எடுத்தால் கடும் நடவடிக்கை - போலீசார் எச்சரிக்கை
x

மதுரை- நத்தம் பறக்கும் பாலத்தில் செல்பி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை


மதுரை- நத்தம் பறக்கும் பாலத்தில் செல்பி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பறக்கும் பாலம்

இதுகுறித்து மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை-நத்தம் சாலையில் புதிதாக பறக்கும் மேம்பாலம் கடந்த 8-ந்தேதி திறக்கப்பட்டு, பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேம்பாலத்தில் போக்குவரத்து சீராக செல்வதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவின்படி 24 மணி நேரமும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போக்குவரத்து காவலர்களுடன் கூடிய ரோந்து வாகனம் நேற்று முதல் இயக்கப்படுகிறது.

செல்பி எடுத்தால் நடவடிக்கை

மேலும், பறக்கும் பாலத்தின் மேலே வாகனத்தை நிறுத்துவது, மேலே நின்று செல்பி எடுப்பது, பாலத்தில் வாகனங்களில் சாகசம் செய்வது, பாலத்தின் மேலே கேக் வெட்டுவது மற்றும் பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் அமர்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story