மகா காளியம்மன் வீதி உலா
மகா காளியம்மன் வீதி உலா நடந்தது.
திருச்சி
கல்லக்குடி:
புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம் ஊராட்சி திருவள்ளுவர் நகரில் உள்ள மகா காளியம்மன் மற்றும் ஆகாச கருப்புசாமி கோவில் திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அன்று இரவு கரகம் பாலித்தலும், நேற்று காலை அம்மன் வீதி உலாவும் நடந்தது. மேலும் கிடா வெட்டி, பொங்கல் வைத்து, சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று மாலை மாவிளக்கு சிறப்பு பூஜையையொட்டி, பக்தர்கள் வீடுகளில் இருந்து மாவிளக்கை கோவிலுக்கு கொண்டு வந்து வழிபட்டனர். இன்று(திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் சாமி விடையாற்றி, மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழாவையொட்டி வாண வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story