நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்திதி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்சேலத்தில் திரளானவர்கள் பங்கேற்பு


நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்திதி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்சேலத்தில் திரளானவர்கள் பங்கேற்பு
x
சேலம்

சேலம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சேலத்தில் தி.மு.க.வினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

உண்ணாவிரத போராட்டம்

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க. இளைஞர் அணி, மாணவரணி, மருத்துவரணி ஆகியவை சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. (சேலம் மத்தியம்), டி.எம்.செல்வகணபதி (மேற்கு), எஸ்.ஆர். சிவலிங்கம் (கிழக்கு) ஆகியோர் தலைமை தாங்கி பேசினர். எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி., மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பேசினர்.

போராட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, ராஜேந்திரன், மாநகராட்சி பணிக்குழு தலைவர் சாந்தமூர்த்தி, இளைஞர் அணி அமைப்பாளர்கள் அருண்பிரசன்னா, மணிகண்டன், மாணவர் அணி அமைப்பாளர்கள் கோகுல்காளிதாஸ், கண்ணன், சீனிவாசன், மருத்துவர் அணி அமைப்பாளர்கள் அருள், ஆர்.கோகுல், கே.கோகுல், மாணவர் அணி மாநில துணை செயலாளர் தமிழரசன், மாநகர செயலாளர் ரகுபதி, மெய்யனூர் பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், வடக்கு ஒன்றிய செயலாளர் ரெயின்போ பி.நடராஜன், விவசாய அணி அமைப்பாளர் ராஜா, சேலம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி ராஜா, நிர்வாகிகள் ரமேஷ்பாபு, செந்தில் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

மாணவனின் தந்தை கண்ணீர்

போராட்டத்தில், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட சேலம் மேட்டூர் அருகே உள்ள கோனூர் கிராமத்தை சேர்ந்த அஜித் என்ற மாணவனின் தந்தை சிவக்குமார் கலந்து கொண்டு கண்ணீர் மல்க பேசினார். அப்போது எனது மகன் அஜித் 10, 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று முன்னாள் கவர்னர் ரோசையாவிடம் பாராட்டு பெற்றான். நீட் தேர்வில் தோல்வி அடைந்து மருத்துவ கனவை இழந்ததால் எனது மகன் தற்கொலை செய்து கொண்டான். என் மகன் போன்று இன்னொரு இறப்பு நடக்ககூடாது. இந்த போராட்டத்தை முன்னெடுத்த தி.மு.க.விற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காமல் தொடர்ந்து மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் மத்திய அரசையும், தமிழக கவர்னருக்கும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.


Next Story