வீட்டை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெசவு தொழிலாளி குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம்


வீட்டை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெசவு தொழிலாளி குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம்
x
சேலம்

தாரமங்கலம்

தாரமங்கலத்தில் வீட்டை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெசவு தொழிலாளி குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

நெசவு தொழிலாளி

தாரமங்கலம் நகராட்சி 7-வது வார்டு அத்தாணி நாகப்ப முதலி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது50). நெசவு தொழிலாளி. இவர் தனது மனைவி பெரியநாயகம் பெயரில் உள்ள வீட்டை அதே பகுதியை சேர்ந்த சிலர் வீடு தனக்கு சொந்தம் என்று கூறி அபகரித்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாரிமுத்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாரிமுத்து தனது மனைவி பெரியநாயகம், தாயார் கனகாம்பாள் (75), உறவினர்கள் அங்கப்பன் (65), குமார் (50) ஆகியோருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

போலீசார் பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் கீர்த்தி, மற்றும் போலீசார் விரைந்து சென்று மாரிமுத்து மற்றும் அவரது குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வீட்டை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story