காங்கிரஸ் கட்சி சார்பில் வாயில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு பல்லடம்-கொசவம்பாளையம் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
பல்லடம்,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வாயில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு பல்லடம்-கொசவம்பாளையம் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் திடீரென கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த திடீர் சாலை மறியலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் காங்கிரஸ் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். மறியல் போராட்டத்தில், பல்லடம் நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேசன், மாவட்ட பொதுச்செயலாளர் நரேஷ் குமார், அய்யம்பாளையம் வேலுச்சாமி, ருத்ரமூர்த்தி, கிருஷ்ணகுமார், செந்தில்குமார், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story