பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டம்


பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x

தர்மபுரியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தர்மபுரி

தர்மபுரி பாரதிபுரத்தில் உள்ள பொது மேலாளர் அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளன மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், கூட்டமைப்பு நிர்வாகிகள் ராமசுந்தரம், முனியன், பாஸ்கரன், ரமணா, சந்திரசேகர், பாபு, சங்க முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

பி.எஸ்.என்.எல். நிறுவன நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீத ஓய்வூதிய பலன்களை அமல்படுத்த வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான தடையை உடனடியாக நீக்க வேண்டும். காலி பணியிடங்களின் அடிப்படையில் அதிகாரிகளுக்கான துறை சார்ந்த தேர்வுகளை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தர்ணா போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.


Next Story