நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து போராட்டம் தமிழ்நாடு விவசாய சங்கம் அறிவிப்பு.

நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து போராட்டம் தமிழ்நாடு விவசாய சங்கம் அறிவிப்பு.
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 15-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என மாவட்ட செயலாளர் மோகன் தெரிவித்தார்.

சிவகங்கை

சிவகங்கை,

மாவட்ட குழு கூட்டம்

சிவகங்கையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டகுழு கூட்டம் மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒரு சிப்பத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள ரூபாய் எவ்வளவு என்பதை தகவல் பலகை எழுதி வைப்போம் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அறிவித்ததை செயல்படுத்த வேண்டும்

போராட்டம்

சிப்பத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை தருவது தொடர்பான குறைகளை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கிற தகவல் பலகையும் எழுதி வைக்க வேண்டும். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் மாங்குளம், வேளாணி உள்ளிட்ட பகுதிகளும், இளையான்குடி பகுதிகளும், காளையார் கோவில், தேவகோட்டை பகுதிகளிலும் நெற்பயிர்கள் கருகியது.

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15-ந் தேதி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிைறவேற்றப்பட்டது.

Next Story