டாஸ்மாக் சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்


டாஸ்மாக் சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் டாஸ்மாக் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை


சிவகங்கையில் டாஸ்மாக் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்கள் போராட்டம்

ஏ.ஐ.டி.யூ.சி. டாஸ்மாக் சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கூலி உயர்வு கேட்டு சிவகங்கையில் உள்ள தமிழ்நாடு வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.. இதையொட்டி அவர்கள் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு சிவகங்கை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் கோபால், சகாயம், கங்கைசேகரன், பாண்டி, முருகன், குஞ்சரம் காசி, டாஸ்மாக் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க தலைவர் ரவி, செயலாளர் செந்தில், பொருளாளர் சிங்கத்துரை உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ.குணசேகரன் கூறியதாவது:-

கூலி உயர்வு வழங்க வேண்டும்

டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபான பெட்டிகளை ஏற்றி இறக்க ஒப்பந்தம் எடுத்தவருக்கு ஒரு பெட்டிக்கு ரூ.14.19 கொடுக்கிறார்கள். ஆனால் அவர் கடந்த 11 ஆண்டாக ஒரு பெட்டிக்கு ரூ.1.60 மட்டும்தான் தருகிறார். அதே சமயத்தில் கடைகளில் சென்று பெட்டியை இறக்குபவர்களுக்கு ஒரு பெட்டிக்கு ரூ.5 வழங்கப்படுகிறது. இது குறித்து பலமுறை முறையிட்டும் எந்த பயனும் இல்லை. அதனால் கூலி உயர்வு வழங்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

இதனால் நேற்று மண்டல அலுவலகத்தில் இருந்து மதுகடைகளுக்கு மதுபாட்டில்கள் எதுவும் அனுப்பப்படவில்லை.


Next Story