அரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்புதமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் போராட்டம்


அரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்புதமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2023 1:00 AM IST (Updated: 6 Jun 2023 11:03 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்

அரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் அன்புரோஸ் தலைமை தங்கினார். மாநிலத்தலைவர் டில்லிபாபு, மாநில துணை செயலாளர் கண்ணகி, மாவட்ட செயலாளர் மல்லையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

சிட்லிங், சித்தேரி ஊராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ள பழங்குடி மக்களின் நிலங்களை மீட்க வேண்டும். இந்த பகுதிகளில் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலங்களை சட்ட விதிகளை மீறி பழங்குடியினர் அல்லாதோருக்கு பதிவு செய்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலப்பட்டா, வீட்டு மனை பட்டா, பழங்குடியினருக்கு சாதி சான்று வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் கோரிக்கைகளை வலியுறுத்தி உதவி கலெக்டர் ராஜசேகரனிடம் மனு அளிக்கப்பட்டது.


Next Story