திருச்செங்கோட்டில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையினர் போராட்டம்


திருச்செங்கோட்டில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையினர் போராட்டம்
x
நாமக்கல்

திருச்செங்கோடு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை உறுதி செய்து சென்னை ஐகோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை சார்பில் உண்ணாவிரத போராட்டம் செய்ய முயன்றனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 3 பெண்கள் உட்பட சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்திற்கு தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய வெள்ளாளர் வேளாளர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் அண்ணாதுரை கலந்து கொண்டார். மேலும் யுவராஜின் தாயார் ரத்தினம், மனைவி சவிதா மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கவுதம், சுமன் ராஜ், கவுதம், சேலம் மாவட்ட அமைப்பாளர் ஜெயபால், மாநில பொருளாளர் கந்தசாமி, கரூர் மாவட்ட பொறுப்பாளர் ஆனந்த், நாமக்கல் நகர பொறுப்பாளர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story