அன்னிய ஆதிக்கத்துக்கு எதிராக சிறை செல்லும் போராட்டம்
அன்னிய ஆதிக்கத்துக்கு எதிராக சிறை செல்லும் போராட்டம் நடத்தப்படும் என்று வெள்ளையன் தெரிவித்தார்.
அரக்கோணம் நகர அனைத்து வணிகர் சங்கங்கம் சார்பில் 40-ம் ஆண்டு மாநில மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒருங்கினைந்த வேலூர் மாவட்ட தலைவர் கே.எம்.தேவராஜ் தலைமை தாங்கினார். நகர பொது செயலாளர் மான்மல், பொருளாளர் டி.கமல்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ் நாடு அனைத்து வணிகர் சங்களின் மாநில தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பொது மக்கள் இந்திய தயாரிப்புகளையும், உள்ளூர் பொருட்களையும் வாங்கவேண்டும், அன்னிய வணிகத்தை ஒழித்துக் கட்ட வேண்டும். அன்னிய பொருட்களின் ஆதிக்கத்தை முழுமையாக ஒழித்துக் கட்ட இதுவரை முடியவில்லை. எனவே, அன்னிய ஆதிக்கத்திற்கு எதிராக சிறை செல்லும் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.
கூட்டத்தில் மே.5-ந் தேதி நடைபெறவுள்ள வணிகர் சங்க மாநில மாநாட்டில் அரக்கோணம் பகுதியில் இருந்து வணிகர்கள் திரளாக கலந்துகொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நகர வணிகர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.