சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம்


சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2022 1:15 AM IST (Updated: 17 Oct 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம் நடந்தது.

சேலம்

சேலத்தில் பெய்த மழையால் சின்னேரிவயல்காடு நேதாஜி நகரில் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. குழந்தைகள், முதியோர்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் இணைந்து நேற்று மாலை அந்த சாலையில் நாற்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பழுதடைந்த சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவிப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.


Next Story