பிளஸ்-2 மாணவி மாயம்


பிளஸ்-2 மாணவி மாயம்
x
தினத்தந்தி 11 April 2023 7:00 PM (Updated: 11 April 2023 7:00 PM)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் 17 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். மாணவி பிளஸ்-2 தேர்வு எழுதி விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி மாணவி வீட்டில் இருந்து மாயமானார். அவரை உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து தங்களது மகளை கண்டுபிடித்து தரகோரி தந்தை பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பிளஸ்-2 மாணவியை தேடி வருகின்றனர்.


Next Story