மாணவ-மாணவிகள் சாதனை


மாணவ-மாணவிகள் சாதனை
x

சிலம்ப போட்டியில் மாணவ-மாணவிகள் சாதனை

தென்காசி

தென்காசி:

தென்காசி மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ போட்டிகள் இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தென்காசி ஒண்டர் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி மாணவி அக்க்ஷயா தங்கப்பதக்கமும், முகிஷா ஸ்ரீ, சஞ்சய் ராம், ராம் ஆதில் ஆகியோர் வெள்ளி பதக்கங்களும், அல்பின் ஜோஸ், சரவண மானேஷ், வேல் ரோஹித், பரத், தோரண் பாலா, இளமாறன், இஷாந்த், சுகப்பிரியன், கோகுல் ராம் ஆகியோர் வெண்கல பதக்கங்களும் பெற்று சாதனை படைத்தனர். டேக்வாண்டோ போட்டியில் மாணவர்கள் முப்புடாதி முத்து, சுந்தர், முத்துகிருஷ்ணன் ஆகியோர் தங்கப்பதக்கங்களும், ஸ்டீவ் ரியான், கமலேஷ் ஆகியோர் வெள்ளி பதக்கங்களும், ரத்தாஷ் வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி நிர்வாகத்தினர் உள்பட பலர் பாராட்டினர்.

1 More update

Next Story