மாணவ அமைச்சரவை கூட்டம்


மாணவ அமைச்சரவை கூட்டம்
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாணவ அமைச்சரவை கூட்டம்

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாணவ முதல்-அமைச்சர் சபரீஸ் தலைமை தாங்கினார். சபாநாயகராக பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் செயல்பட்டார். வருகிற மார்ச் மாதம் 24-ந்தேதி மாலை 6 மணி முதல் இரவு 7.45 மணி வரை கூட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் விளையாட்டுத்துறை அமைச்சர் மாணவன் பிரவீண் விளையாட்டு போட்டிகளுக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டார். கூட்டத்தில் திறனவு போட்டிகளை நடத்துவது, பள்ளியின் சுத்தம் குறித்து தூய்மை பணியாளர்களிடம் உறுதிப்படுத்துவது, பறக்கும் படையை உருவாக்கி பள்ளி பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மற்றும் உழவர் மழை-2023 நூற்றாண்டு விழா என்ற பெயரில் கொண்டாடுவது, மாணவ-மாணவிகள் நடித்த என் உயிரினும் மேலாண மாணவ கண்மணிகளே என்ற குறும்படம் வெளியிடுவது, நாட்டியாஞ்சலி உள்ளிட்ட விழாக்களை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. விழாவிற்கு மின்சாரத்துறை அமைச்சர், செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் ஆகியோரை அழைப்பது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதில் அனைத்து துறையின் மாணவ அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.


Next Story