பிளஸ்-1 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் ரெயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை


பிளஸ்-1 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால்  ரெயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை
x

பிளஸ்-1 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் ரெயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை

நாமக்கல்

பள்ளிபாளையம்:

பிளஸ்-1 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ்-1 மாணவர்

பள்ளிபாளையம் அலமேடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் பிரபாகரன் (வயது 17). இவர் பள்ளிபாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.

இதில் மாணவர் பிரபாகரன் தேர்ச்சி அடையவில்லை. இதனால் வருத்தம் அடைந்த அவர் மாலை வரை கவலையில் இருந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் அவருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினர். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டை விட்டு வெளியில் சென்ற பிரபாகரன் அங்குள்ள ரெயில் தண்டவாள பகுதியில் நடந்து சென்றார்.

விசாரணை

அப்போது அவர் திடீரென அந்த வழியாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். மேலும் ரெயில் தண்டவாளத்தில் தற்கொலை நடந்ததால் ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் இறந்த பிரபாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-1 மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்ெகாலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story