குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு


குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
x

ஓசூர் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்தான்.

கிருஷ்ணகிரி

மத்திகிரி

ஓசூர் அருகேயுள்ள அன்னை நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மகன் சந்தீப் (வயது 15). இவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள குட்டையில் குளித்த போது தண்ணீரில் மூழ்கினான். அக்கம்பக்கத்தினர் மாணவனை மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது மாணவன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story