கிணற்றில் தவறி விழுந்து மாணவன் சாவு


கிணற்றில் தவறி விழுந்து மாணவன் சாவு
x

கிணற்றில் தவறி விழுந்து மாணவன் உயிரிழந்தான்.

மதுரை

வாடிப்பட்டி,

சமயநல்லூர் அருகே ஊர்மெச்சிகுளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஆனந்தன் மகன் அனீஸ் (வயது 17). இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை என்பதால் அனீஸ் தனது நண்பர்கள் முத்து, நவீன், விகாஸ், குணால் ஆகியோருடன் குளிப்பதற்காக சென்றார். இதையொட்டி வைரவநத்தம் பிரிவில் உள்ள ஒரு கிணற்றில் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது படியில் அமர்ந்திருந்த அனீஸ் எதிர்பாராத விதமாக தவறி உள்ளே விழுந்தார். உடனே அவரது நண்பர்கள் அனீசை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் அனீசை காப்பாற்ற முடியவில்லை. பின்னர் அவர்கள் இதுகுறித்து அலங்காநல்லூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிைடயே அனீஸ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். தீயணைப்பு வீரர்கள் வந்து மாணவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் போராடி அனீசின் உடலை மீட்டனர். இது குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story