கண்மாயில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் சாவு


கண்மாயில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் சாவு
x
தினத்தந்தி 14 May 2023 12:15 AM IST (Updated: 14 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கண்மாயில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

விருதுநகர்

திருச்சுழி,

கண்மாயில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

10-ம் வகுப்பு மாணவன்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே புங்கமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர், வேலுச்சாமி. இவருடைய மகன் சுபப்பிரியன் (வயது14). இவர் சூரப்பநாயக்கன்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

கோடை விடுமுறை என்பதால் தனது சொந்த ஊரான புங்கமரத்துப்பட்டிக்கு வந்திருந்தார்.

இந்நிலையில் சுபப்பிரியன் அருகில் உள்ள கண்மாய்க்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. கண்மாயில் இறங்கிய சுபப்பிரியனை காணாததால் அங்கிருந்தவர்கள் அவரது வீட்டிற்கு தகவல் தெரிவித்தனர்.

பிணமாக மீட்பு

அவரது குடும்பத்தினர், உறவினர்கள் விரைந்து வந்து கண்மாயில் இறங்கி தேடியபோது சுபப்பிரியன் பிணமாக மீட்கப்பட்டார்.

கண்மாயில் குளித்தபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி அவர் உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ம.ரெட்டியபட்டி போலீசார், மாணவன் உடலை பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கண்மாயில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

1 More update

Next Story