குளத்தில் மூழ்கி மாணவன் சாவு


குளத்தில் மூழ்கி மாணவன் சாவு
x

தென்காசி அருகே குளத்தில் மூழ்கி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

தென்காசி

தென்காசி அருகே குளத்தில் மூழ்கி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

பள்ளி மாணவன்

தென்காசி அருகே உள்ள மத்தளம் பாறை புதுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி காந்தாரி. இந்த தம்பதிக்கு கண்ணன் (வயது 10) என்ற ஒரே மகன் இருந்தான். கண்ணன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் மாலை கண்ணன் அவனது நண்பர்கள் சிலர் உடன் அதே ஊரில் உள்ள மாரநேரி குளத்தில் குளிக்கச் சென்றுள்ளான். குடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென கண்ணன், தண்ணீரில் மூழ்கினான்.

பரிதாப சாவு

இதனை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து அவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. எனவே கண்ணன் பரிதாபமாக அந்த இடத்திலேயே உயிரிழந்தான்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் குற்றாலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று காலை பரிசோதனைக்கு தாமதம் ஆனதால் கண்ணனின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் கூடி நின்று போராட்டம் செய்ய தயாரானார்கள். பின்னர் போலீசார் சமரசம் செய்த பின்னர் பரிசோதனை நடைபெற்றது. அதன் பிறகு பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் ஊருக்கு கொண்டு சென்றனர்.


Next Story