மின்சாரம் தாக்கி மாணவர் பலி


மின்சாரம் தாக்கி மாணவர் பலி
x

மின்சாரம் தாக்கி மாணவர் பலியானாா்.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் தவுட்டுப்பாளையம் வேலாயுதம் வீதியை சேர்ந்தவர் ஆனந்தி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் பாபு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ஆனந்தியும், அவருடைய மகன் சபரி ஸ்ரீயும் (வயது 13) தனியாக வசித்து வந்தனர். சபரி ஸ்ரீ தவுட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

மேலும் தவுட்டுப்பாளையம் மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் விடுமுறை நாட்களில் சபரி ஸ்ரீ வேலை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று காலை கடையில் மளிகை பொருட்களை பாக்கெட் போடுவதற்காக மின்சார பிளக்கை பொருத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவரை எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்து கீழே விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சபரி ஸ்ரீ இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story