மாணவி கொலை வழக்கு - நடந்தது என்ன ? கைதான சதீஷை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு


மாணவி கொலை வழக்கு - நடந்தது என்ன ? கைதான சதீஷை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு
x

கல்லூரி மாணவி சத்யா, ரெயில் முன்பு தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சென்னை,

காதலிக்க மறுத்த மாணவியை ரெயில் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

கடந்த 13-ந்தேதி மதியம் மாணவி சத்யாவை ரெயில் முன்பு தள்ளி கொலை செய்துவிட்டு தப்பிய கொடூர கொலையாளி சதீசை ரெயில்வே போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி துரைப்பாக்கத்தில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். சதீசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ரெயில்வே போலீசிடமிருந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே, சத்யபிரியாவின் தாய் மற்றும் அவர் படித்த கல்லூரியில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விசாரணையின் முடிவில் கிடைக்கக்கூடிய தகவல்களை வைத்து, அடுத்த வாரம் சதீஷை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மாணவி சத்யா கொலையில் கொலையாளி சதீசுக்கு எதிராக அனைத்து வலுவான ஆதாரங்களும் கிடைத்திருப்பதால் உச்சப்பட்ச தண்டனையில் இருந்து சதீஷ் தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story