கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 17 May 2023 6:45 PM GMT (Updated: 17 May 2023 6:45 PM GMT)

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் 3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மூலம் 3-ம் ஆண்டு மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வுக்கான கட்டணத்தை கட்டி வருகின்றனர். ஆன்லைன் மூலம் கல்வி கட்டணம் செலுத்துவதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக மாணவர்கள் பெரும் அதிருப்தி அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் தேர்வு கட்டணம் கட்டியதற்கு உரிய ரசீது வழங்கப்படாதை கண்டித்தும், தேர்வு கட்டணம் கட்டுவதில் உள்ள ஆன்லைன் குளறுபடிகளை தடுக்க தவறியதை கண்டித்தும் மாணவ,மாணவிகள் நேற்று கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் ராஜவேல் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நடவடிக்கை

அப்போது மாணவர்கள், தேர்வு கட்டணம் கட்டியதற்கான உரிய ரசீதை தங்களுக்கு உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கல்லூரி முதல்வர் தெரிவித்தார். அதனை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story