மாணவி ஸ்ரீமதி பிறந்தநாள்: பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்க காவல்துறை அனுமதி மறுப்பு


மாணவி ஸ்ரீமதி பிறந்தநாள்: பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்க காவல்துறை அனுமதி மறுப்பு
x

மாணவி ஸ்ரீமதியின் மர்ம சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது.

இந்த கலவரத்தின்போது பள்ளி சூறையாடப்பட்டதோடு பள்ளி வாகனங்களும், போலீஸ் வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் மாணவி ஸ்ரீமதியின் மர்ம சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், வன்முறை சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பிறந்த தினம் இன்று. இதையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்க பெற்றோர் காவல்துறையிடம் அனுமதி கேட்டு இருந்தனர்.

இந்நிலையில், மாணவி ஸ்ரீமதியின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்க போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறி ஸ்ரீமதியின் பெற்றோர் கோரிக்கையை காவல்துறையினர் நிராகரித்துள்ளனர்.

மேலும் மகளுக்கு கேக் ஊட்ட வேண்டிய கைகள் இன்று போட்டோவுக்கு மாலை போட்டுள்ளன என்று தாய் கண்ணீர் வடித்து கதறி அழுதார்.

1 More update

Next Story