வாலிபரை கழுத்து அறுத்துக்கொன்ற 10-ம் வகுப்பு மாணவன்


வாலிபரை கழுத்து அறுத்துக்கொன்ற 10-ம் வகுப்பு மாணவன்
x

பெற்றோரை அவதூறாக பேசியதால் வாலிபரின் கழுத்தை அறுத்துக்கொன்ற 10-ம் வகுப்பு மாணவன் திருப்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தான்.

திருப்பூர்

அவினாசி

அவினாசியில் பெற்றோரை அவதூறாக பேசியதால் வாலிபரின் கழுத்தை அறுத்துக்கொன்ற 10-ம் வகுப்பு மாணவன் திருப்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தான்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வாலிபர் படுகொலை

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த சீனிவாசன் மகன் யுவராஜ் (வயது 32). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த வேலாயுதம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக குடியிருந்து குடிநீர் கேன் வினியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் சம்பவத்தன்று கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார். இந்த கொலை தொடர்பாக அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் யுவராஜ் குடியிருக்கும் வீட்டிற்கு யாராவது வந்தார்களா? என்று ஆய்வு செய்தனர். மேலும் அக்கம் பக்கத்திலும் விசாரணை மேற்கொண்டனர். இந்த கொலை தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் கொலை ெதாடர்பாக அந்த பகுதியில் வசிக்கும் தென்காசியை சேர்ந்த 16 வயது நிரம்பிய 10-ம் வகுப்பு மாணவன் திருப்பூர் கோர்ட்டில் சரண் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். உடனே திருப்பூர் போலீசார் அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவினாசி போலீசார் அந்த மாணவனை அழைத்து சென்று கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

அவதூறாக பேசியதால்...

விசாரணையில் ஏற்கனவே யுவராஜிக்கும், மாணவனின் தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது யுவராஜ், மாணவரின் பெற்றோரை அவதூறாக பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக யுவராஜ் மீது அந்த மாணவன் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று யுவராஜ் வீட்டுக்கு சென்ற மாணவன் யுவராஜின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அந்த மாணவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.



1 More update

Next Story