3,947 நாணயங்களை வைத்து இந்திய வரைபடம் வரைந்த மாணவர்கள்
நாச்சிக்குப்பம் அரசு பள்ளியில் 3,947 நாணயங்களை வைத்து இந்திய வரைபடத்தை மாணவர்கள் வரைந்தனர்.
கிருஷ்ணகிரி
வேப்பனப்பள்ளி
வேப்பனப்பள்ளி அருகே நாச்சிக்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை விஜயா தலைமை தாங்கினார். ஊராட்சிமன்ற தலைவர் இந்திரா நாகராஜ் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுதந்திர தின விழாவையொட்டி மாணவ-மாணவிகள் 3,947 நாணயங்களை வைத்து இந்திய வரைபடம் மற்றும் 28 மாநிலங்களையும் நாணயங்கள் வைத்து வரைந்தனர். இந்த மாணவர்களை கிராம மக்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story