பணகுடி புள்ளிமான் பள்ளி மாணவர்கள் சாதனை


பணகுடி புள்ளிமான் பள்ளி மாணவர்கள் சாதனை
x

வட்டார விளையாட்டு போட்டியில் பணகுடி புள்ளிமான் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்

திருநெல்வேலி

பணகுடி:

ஆவரைகுளம் பாலையா மாத்தாண்டம் மேல்நிலைப்பள்ளியில் வள்ளியூர் வட்டார அளவில் பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டி நடந்தது. 14 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான எறிபந்து போட்டியில் பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் இடத்தையும், 14 வயதினருக்கான சதுர வட்ட போட்டியில் சூரியபிரகாஷ், மனோஜ்குமார் ஆகியோர் இரண்டாவது இடத்தையும், வட்டு எறிதல் போட்டியில் பிரேஷ்மா யோகா மூன்றாவது இடத்தையும், குண்டு எறிதல் போட்டியில் வளன் ஆன்றோ விமல் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் தேவிகா பேபி, நிர்வாகி பொன்னுலட்சுமி, கல்வி நிர்வாகி சுந்தர்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.


Next Story