வண்ண பொடிகளை தூவி மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி


வண்ண பொடிகளை தூவி மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு பெற்றதை தொடர்ந்து, வண்ண பொடிகளை தூவி மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு பெற்றதை தொடர்ந்து, வண்ண பொடிகளை தூவி மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் உள்பட மொத்தம் 67 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் உள்பட மாணவர்கள் 3,794 பேரும், மாணவிகள் 4,174 பேரும் சேர்த்து மொத்தம் 7,968 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

இதில் மாணவர்கள் 3,512 பேரும், மாணவிகள் 4,095 பேரும் சேர்த்து மொத்தம் 7,607 பேர் தேர்வு எழுதினார்கள். மாணவர்கள் 282 பேரும், மாணவிகள் 79 பேரும் சேர்த்து 361 பேர் தேர்வு எழுத வரவில்லை. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 37 தேர்வு மையங்களிலும், தனித்தேர்வர்கள் லதாங்கி வித்யா மந்திர் பள்ளியிலும் தேர்வு எழுதினார்கள்.

மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி

இந்த நிலையில் நேற்று தேர்வுகள் முடிவடைந்தை தொடர்ந்து டி.கோட்டாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் வண்ண பொடிகளை முகத்தில் பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒரு தனியார் பள்ளி மாணவர்கள் தங்களது சட்டையின் பின்புறம் மிஸ் யூ பிரண்டு என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்தனர்.

வால்பாறையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்கு வெளியே வந்து துள்ளி, குதித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் ஆனைமலையில் மாணவிகள் முகத்தில் வண்ண பொடிகளை பூசியும், செல்பி புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். பள்ளி பருவம் முடிந்து கல்லூரிக்கு செல்லும் உற்சாகத்தில் மாணவ-மாணவிகள் வினாத்தாள்களை தூக்கி வீசி, மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.


Next Story