மாணவர்களை விட, மாணவிகளே அதிக தேர்ச்சி


மாணவர்களை விட, மாணவிகளே அதிக தேர்ச்சி
x

மாணவர்களை விட, மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரியலூர்

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் அரியலூர் மாவட்டத்தில் மாணவர்களை விட, மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட, மாணவிகள் 2.02 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

8-வது இடத்துக்கு முன்னேறியது

கடந்த 2020-ம் ஆண்டு பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி தரவரிசை பட்டியலில் அரியலூர் மாவட்டம் 14-வது இடத்தை பிடித்திருந்தது. அந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 94.41 ஆகும். அந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு 2.06 சதவீதம் அதிகரித்து 96.47 சதவீதம் பெற்றுள்ளது. இதனால் தற்போது மாநில அளவில் தர வரிசை பட்டியலில் 6 இடங்கள் முன்னேறி அரியலூர் மாவட்டம் 8-வது இடத்தை பிடித்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளிகளில் கண்பார்வை குறைபாடுடையவர்கள் 4 பேரும் தேர்ச்சி பெற்றனர். உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள், காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் மாற்றுத்திறனாளிகளில் தலா 8 பேர் தேர்வு எழுதியதில், தலா 7 பேர் தேர்ச்சி பெற்றனர். இதர வகை மாற்றத்திறனாளிகள் 16 பேரில், 15 பேர் தேர்ச்சி பெற்றனர்.

100-க்கு 100 மதிப்பெண்

அரியலூர் மாவட்டத்தில் இயற்பியல் பாடத்தில் 13 பேரும், பொருளியல் பாடத்தில் 7 பேரும், வேதியியல் பாடத்தில் 88 பேரும், வணிகவியல் பாடத்தில் 15 பேரும், உயிரியியல் பாடத்தில் 18 பேரும், தாவரவியல் பாடத்தில் 7 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 7 பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 5 பேரும், கணிதம் பாடத்தில் 10 பேரும், வணிக கணிதம் பாடத்தில் 2 பேரும் என மொத்தம் 181 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.


Next Story