கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் 19-ந்தேதி கடைசி நாள்

கடலூர்

விருத்தாசலம்

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை மற்றும் இளமறிவியல் 2023-24-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும். இக்கல்லூரியில் சுழற்சி 1-ல் பி.ஏ.- தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.காம், பி.பி.ஏ., பி.எஸ்சி.-கணிதம், இயற்பியல், வேதியியல். தாவரவியல், விலங்கியல் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகளும், கழற்சி 2-ல் பி.ஏ. -தமிழ், ஆங்கிலம், பி.காம், பி.எஸ்சி.- கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகளும் உள்ளன. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மே 19-ந்தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஒ.சி, பி.சி., எம்.பி.சி., மாணவர்களுக்கு ரூ.50 விண்ணப்பக் கட்டணமும், ஒரு மாணவர் ரூ50 விண்ணப்பக் கட்டணம் செலுத்தி 5 அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.2 மட்டுமே. மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் மே 23-ந் தேதி வெளியாகும். மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரர், முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகளுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின்படி மே 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும். பொது முதற்கட்ட கவுன்சிலிங் மே 30 முதல் ஜூன் 9-ந் தேதி வரையும், இரண்டாம் கட்ட கவுன்சிலிங் ஜூன் 12 முதல் 20-ந்தேதி வரை நடைபெறும். முதலாமாண்டு சேர்க்கைக்குப்பின் ஜூன் 22-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். மேலும் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story