பள்ளி தொட்டியில் தண்ணீர் நிரப்பும் மாணவர்கள்: வீடியோ வைரல்


பள்ளி தொட்டியில் தண்ணீர் நிரப்பும் மாணவர்கள்:  வீடியோ வைரல்
x

கரூரில் பள்ளி தொட்டியில் தண்ணீர் நிரப்பும் மாணவர்கள் குறித்து வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர்

குடிநீர் குழாய் துண்டிப்பு

கரூர் மாநகராட்சி வாங்கல் சாலை ஆதிவிநாயகர் கோவில் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான ஜெயபிரகாஷ் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவ, மாணவிகளின் குடிநீர் தேவைக்காக பள்ளி வளாகத்தில் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி 4 அடி உயர சிமெண்டு மேடையில் வைக்கப்பட்டுள்ளது.

இதில் நிரப்பப்படும் தண்ணீரை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வந்தனர். 6 மாதத்திற்கு முன்பு சாலை பணிகள் நடந்தபோது குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கு தண்ணீர் வருவது தடைப்பட்டது.

வீடியோ வைரல்

இதனால் அவ்வப்போது மாநகராட்சிக்கு சொந்தமான லாரி மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு அந்த தண்ணீர் பள்ளியின் தொட்டியில் சேமிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் மாநகராட்சிக்கு சொந்தமான டேங்கர் லாரி மூலம் தொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணி நடந்தது. இதில் பள்ளி மாணவர்கள் ஏணியை போட்டு டேங்கர் லாரியில் இருந்து குழாய் வைத்து தண்ணீர் நிரப்பி உள்ளனர். இதனால் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story