அரசு பஸ்சை பள்ளி மாணவர்கள்-பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம்


அரசு பஸ்சை பள்ளி மாணவர்கள்-பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2023 12:30 AM IST (Updated: 25 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூர் அருகே அரசு பஸ்சை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் அருகே அரசு பஸ்சை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேறு வழித்தடத்தில் இயக்கம்

வள்ளியூர் அருகே சிறுமளஞ்சி கிராமம் உள்ளது. வள்ளியூரில் இருந்து சிறுமளஞ்சிக்கு தினமும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை என சர்க்குலர் முறையில் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக காலை 8.30 மணி அளவில் பள்ளி நேரத்தில் இயக்கப்பட்டு வந்த பஸ்சும், மாலை 5.30 மணியளவில் பள்ளி முடிந்து ஊருக்கு இயக்கப்பட்டு வந்த பஸ்சும் திடீரென்று வேறு ஊருக்கு மாற்றி இயக்கப்பட்டதால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு சென்று வரும் மாணவ- மாணவிகளும், வேலைக்கு செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

பஸ் சிறைபிடிப்பு

இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக அதிகாரியிடம் பொதுக்கள் புகார் தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நேற்று காலை 9 மணியளவில் சிறுமளஞ்சி ஊருக்குள் வந்த அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் காலை மற்றும் மாலை நேரத்தில் முறையாக டவுண் பஸ்சை இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story