திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x

தேர்வு முடிவுகளில் குளறுபடி என்று கூறி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

திருவலம்

காட்பாடி தாலுகா திருவலத்தை அடுத்த சேர்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தேர்வு முறைகேடுகளை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும். தேர்வு முடிவுகளை முறையான நேரத்தில் வெளியிட வேண்டும்.

மறு கூட்டல் தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து துணைவேந்தர் ஆறுமுகம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

அதன்பேரில் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் தொடர்பாக உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தால் அங்கு ரபரப்பு ஏற்பட்டது.

---

1 More update

Related Tags :
Next Story