திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை மாணவ- மாணவிகள் முற்றுகை


திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை மாணவ- மாணவிகள் முற்றுகை
x

குடவாசல் ஒன்றியத்தில் கல்லூரிக்கு கட்டிடம் கட்ட வலியுறுத்தி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை மாணவ- மாணவிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்


குடவாசல் ஒன்றியத்தில் கல்லூரிக்கு கட்டிடம் கட்ட வலியுறுத்தி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை மாணவ- மாணவிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு கலைக்கல்லூரி

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டு வகுப்புகள் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தில் செயல்பட்டு வந்தன.இந்த கல்லூரிக்கு சொந்தமாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கல்லூரி மாணவ-மாணவிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த கல்லூரிக்கு கொரடாச்சேரி ஒன்றியம் செல்லூர் என்கிற பகுதியில் இடம் பார்க்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு அந்த கல்லூரி மாணவ-மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் அவர்கள் கல்லூரிக்கான கட்டிடத்தை குடவாசல் ஒன்றியத்தில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி மாணவ-மாணவிகள் நேற்று விளமல் கல்பாலத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை அடைந்தனர்.

முற்றுைக போராட்டம்

இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் தலைமையில் போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்குள் மாணவ-மாணவிகள் நுழைவதை தடை செய்யும் வகையில் வாசல் கதவுகளை மூடி தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் கலெக்்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில மாணவர்கள் மூடப்பட்ட கதவின் மீது ஏறி கோஷம் எழுப்பினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கலெக்டர் பேச்சுவார்த்தை

போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஹரி சுர்ஜித் தலைமை தாங்கினாா். மாவட்ட செயலாளர் ஆனந்த், மாவட்ட துணை செயலாளர் சூர்யா, குடவாசல் கல்லூரி கிளை தலைவர் முல்லைவேந்தன், நிர்வாகி சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து உதவி கலெக்டர் சங்கீதா, தாசில்தார் நக்கீரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்கள் கலெக்டரை நேரில் சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இதனால் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தங்களது கோரிக்கை மனுவை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதுடன், அதற்கான உரிய பதில் பெற்று தரப்படும் என கலெக்டர் உறுதி அளித்தார். இதை ஏற்று மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story