நூலகத்தில் மாணவர்கள் புத்தக வாசிப்பு


நூலகத்தில் மாணவர்கள் புத்தக வாசிப்பு
x

நூலகத்தில் மாணவர்கள் புத்தக வாசித்தனர்.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் கிளை நூலகம் உள்ளது. இந்த நூலகத்தில் பள்ளி மாணவ-மாணவிகள், இல்லம் தேடி கல்வி மைய மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளை நூலகர் ரெங்கசாமி வரவேற்றார். கல்லாலங்குடி கலிபுல்லா நகர் பகுதியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் மதி பவித்ரா, கல்வி மைய மாணவர்கள், கலிபுல்லா நகர் பகுதி பள்ளி மாணவர்களையும் நூலகத்திற்கு அழைத்து வந்தார். நிகழ்ச்சியில், பட்டதாரி ஆசிரியர் சசிகுமார் கலந்துகொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தக வாசிப்பின் நோக்கம் குறித்து பேசினார். பின்னர் கோடைகால விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் எப்படி எல்லாம் கொண்டாடலாம். மாணவர் மத்தியில் புத்தக வாசிப்பை பற்றியும் கூறினார். மாணவர்கள் நூலகத்தில் உள்ள சிறுகதை புத்தகங்கள், பொது துணுக்குகள், வாழ்க்கை வரலாறு புத்தகங்கள், விடுகதைகள், நகைச்சுவை துணுக்குகள், சிறுவர் நாடகங்கள் என பல்வேறு புத்தகங்களை எடுத்து படித்து பயன்பெற வேண்டும் என்றும் கூறப்பட்டது.


Next Story