போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு


போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
x

போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

அரியலூர்

உறுதிமொழி ஏற்பு

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று போலீசார் சார்பில் நடந்த 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' விழாவில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு மாணவ-மாணவிகளும் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதன்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் போலீசார் சார்பில் பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றனர்.

விழிப்புணர்வு ஊர்வலம்

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் கற்பகம், போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையிலும், அரியலூர் காமராஜர் ஒற்றுமை திடலில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையிலும் மாணவ-மாணவிகள் போதைப்பொருட்கள் ஒழிப்பு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

முன்னதாக போலீசார் சார்பில் நடந்த போதைப்பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் பெரம்பலூரில் கல்லூரி மாணவர்களும், அரியலூரில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டு போதை ப்பொருள் பழக்கத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் கோஷங்களை எழுப்பியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அரியலூரில் ஊர்வலத்தை கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, தாசில்தார் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story