மினிபஸ் படிக்கட்டில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம்
மினிபஸ் படிக்கட்டில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்தது தொடர்பாக டிரைவர், கண்டக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே வீரசோழபுரம் கிராமத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி மினி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. வீரசோழபுரம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது மினி பஸ்சின் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் பயணம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அஜாக்கிரதையாக மினிபஸ்சை இயக்கியதாக கூறி டிரைவர் சண்முகம், கண்டக்டர் மகேந்திரன் ஆகியோர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story