ஆபத்தான முறையில் டிராக்டரில் மேசைகளை எடுத்து சென்ற மாணவர்கள் - தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
விழுப்புரம் அருகே ஆபத்தான முறையில், மாணவர்களை டிராக்டரில் மேசைகளை எடுத்து வர செய்த சம்பவத்தில், அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவு தேர்வு நடைபெற்றது. தேர்வு மையமான அரசுப்பள்ளியில் போதிய மேசை, நாற்காலிகள் இல்லாததால், 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த தனியார் பள்ளியில் இருந்து எடுத்துவரப்பட்டது.
தேர்வு முடிந்ததும் அந்த நாற்காலி, மேசைகளை மீண்டும் தனியார் பள்ளிக்கு டிராக்டர் மூலம் எடுத்து செல்லப்பட்டது. மேசை, நாற்காலிகளை மாணவர்களே டிராக்டரில் எடுத்து சென்றுள்ளனர்.
டிராக்டரில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணித்த வீடியோ வெளியானது. இந்த நிலையில், மாணவர்களை டிராக்டரில் பயணிக்க செய்த, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோரை பணிநீக்கம் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story