ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்திய மாணவர்கள்
ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்திய மாணவர்கள்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கடிநெல்வயல் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்தனர். அதன்படி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் 2 வகுப்பறைகளுக்கு புதிதாக வர்ணம் பூசி, சுவர்களில் திருக்குறளை எழுதினர். பின்னர் பள்ளி வகுப்பறையில் தங்களுக்கு பாடம் நடத்திய அனைத்து ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடத்தினர். விழாவிற்கு பள்ளி மாணவி மணிபாரதி தலைமை தங்கினார். மாணவர் ராஜதுரை வரவேற்றார்
விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொன்தர்மதுரை, பொருளாளர் ராமலிங்கம், பள்ளி தலைமையாசிரியர் பெருமாள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாணவர்கள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கினர்.
Related Tags :
Next Story