அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம்


அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம்
x

மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது.

மயிலாடுதுறை


மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது.

ஆய்வு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II, மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 50 கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சிதுறையுடன் 16 துறைகள் இணைந்து திட்ட பணிகள் மற்றும் தனிநபர் பயன்படும் வகையிலான பணிகளுக்கு முன்னுரிமை வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.

நடவடிக்கை

மேலும் இந்த ஊராட்சிகளில் முகாம்கள் நடத்தி அனைத்துதுறைகளின் திட்டங்களும் சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இணை இயக்குனர் முருகண்ணன், இணை இயக்குனர் (வேளாண்மைத்துறை) சேகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்


Next Story