எரிவாயு சிலிண்டர் வினியோகம் குறித்த ஆய்வு கூட்டம்


எரிவாயு சிலிண்டர் வினியோகம் குறித்த ஆய்வு கூட்டம்
x

எரிவாயு சிலிண்டர் வினியோகம் குறித்த ஆய்வு கூட்டம்

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வட்ட அளவிலான எரிவாயு சிலிண்டர் வினியோகம் குறித்த ஆய்வு கூட்டம் திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர்கள் அலெக்சாண்டர்(திருத்துறைப்பூண்டி), வசுமதி( முத்துப்பேட்டை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எரிவாயு சிலிண்டர் வினியோக குறைபாடுகள் குறித்தும், புதிய சிலிண்டர்கள் பெறும் வழிமுறைகளை எளிதாக்குவது, மண்எண்ணெய், சமையல் ஆயில், ரேஷன் பொருட்கள் வினியோகம், அங்காடி ஆகியவற்றின் செயல்பாடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், நாச்சிகுளம் நுகர்வோர் குழு தலைவர் பொன் வேம்பையன், செயலாளர் பாசில் அகமது மற்றும் எரிவாயு முகவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் சேக்தாவூது நன்றி கூறினார்.


Next Story