அரசின் திட்டங்கள், வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்


அரசின் திட்டங்கள், வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
x

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் அரசின் திட்டங்கள், வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடந்தது.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் அரசின் திட்டங்கள், வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடந்தது.

ஆய்வு கூட்டம்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் இயக்குனருமான அமுதவள்ளி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் லலிதா முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி கலெக்டர்கள் யுரேகா (மயிலாடுதுறை), அர்ச்சனா (சீர்காழி), ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

கண்காணிப்பு அலுவலர் நியமனம்

முன்னதாக, மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் பட்டவர்த்தி கிராம ஊராட்சி மற்றும் மணல்மேடு பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:- கூறுகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாதம் ஒருமுறை அந்தந்த மாவட்டத்திற்கு சென்று அனைத்துத் துறை செயல்பாடுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

அறிவுரை வழங்க வேண்டும்

இந்த ஆய்வில் குறைகள் இருப்பின் அதனை களைந்து, சிறப்பாக செயல்பட அறிவுரைகள் வழங்குவது மாவட்ட கண்காணிப்பு அலுவலரின் பணியாகும். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சிகள் துறை போன்ற துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story