பிரதமர் வீடு திட்ட பயனாளிகள் தேர்வு குறித்து ஆய்வு கூட்டம்


பிரதமர் வீடு திட்ட பயனாளிகள் தேர்வு குறித்து ஆய்வு கூட்டம்
x

பிரதமர் வீடு திட்ட பயனாளிகள் தேர்வு குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட மன்றத்தில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகளை தேர்வு செய்தல் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் (வட்டார ஊராட்சி) தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யராஜ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு இல்லாத தகுதியான பயனாளிகளை கண்டறிந்து தேர்வு செய்வது குறித்து விளக்கமாக எடுத்துக்கூறப்பட்டது. பயனாளிகள் தேர்வு குறித்து பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தின் 14 கிராம ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், பஞ்சாயத்து அளவிலான குழு கூட்டமைப்பு தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் நிர்மல் நன்றி தெரிவித்து பேசினார்.


Next Story