பழமையான கல்வெட்டுகள் ஆய்வு


பழமையான கல்வெட்டுகள் ஆய்வு
x

ராஜபாளையம் அருகே பழமையான கல்வெட்டுகள் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

விருதுநகர்

ராஜபாளையம்.

ராஜபாளையம் அருகே பழமையான கல்வெட்டுகள் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

கோவில் கருவறை

ராஜபாளையம்-சங்கரன்கோவில் சாலையில் பறவை அன்னம் காத்தருளிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள கல்வெட்டு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியில் மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் இணைந்து ஈடுபட்டது. இதுகுறித்து பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலர் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் கூறியதாவது:-

800 ஆண்டுகளுக்கு முன் பாண்டியர்களால் கட்டப்பட்ட இக்கோவில் முழுவதுமாக இடிந்த நிலையில் கருவறையை மட்டும் பிற்காலத்தில் புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. கோவில் கற்கள் மற்றும் தூண்கள் பூமிக்கு கீழே புதைந்து கிடந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கோவில் இடிபாடுகளில் கிடந்துள்ள கற்களை எந்திரம் மூலமாக பூமியிலிருந்து வெளியே தோண்டி எடுத்து கோவில் நிர்வாக குழு தலைவர் வெள்ளத்துரை மற்றும் உறுப்பினர்களால் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

முழுமையான செய்தி

வரலாற்றுத்துறை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்வெட்டை கண்டறிந்து சுத்தம் செய்யும் முறை, கல்வெட்டுகளை அதற்குண்டான உபகரணங்களை கொண்டு கல்வெட்டு படி எடுக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் உதயகுமார் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோரால் பயிற்சி அளிக்கப்பட்டது. இங்கு 25-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டன.

இன்னும் சில கல்வெட்டுகள் படி எடுக்க வேண்டி உள்ளதால் கோவிலில் உள்ள அனைத்து கல்வெட்டுகளையும் ஒருங்கிணைத்து அதில் உள்ள செய்தியை வெளிக்கொண்டுவரும் பணி நடைபெற்று வருகிறது.

கல்வெட்டுக்கள் துண்டு, துண்டாக இருப்பதால் செய்தியை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பழங்கால வரலாறு

வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் கந்தசாமி கூறியதாவது, ராஜபாளையம் பகுதியை சுற்றி அமைந்துள்ள மாயூரநாதசுவாமி கோவில், தெற்கு வெங்காநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோவில், சோழபுரம் சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் உள்ள கல்வெட்டுகள் மூலம் நமது பகுதியின் பழங்கால வரலாற்றை அறிய முடிகிறது.

எனவே மாணவர்கள் கல்வெட்டுகள் மூலம் பல ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

அப்போது வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் ரமேஷ்குமார், ஜெகநாத் ஆகியோர் உடனிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் வெள்ளத்துரை மற்றும் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


Next Story