கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆய்வு


கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆய்வு
x

ஆம்பூர் அருகே கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

திருப்பத்தூர்

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள குதிரை கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்ற தாசில்தார் குமாரி, உமராபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராணி மற்றும் வருவாய் துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிட்டனர். அதைத்தொடர்ந்து ராஜவீதியில் நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள அரசமரத்தையும் அகற்ற ஊராட்சி மன்ற தலைவர் சுவிதா கணேஷ், துணைத் தலைவர் விஜய், ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் அந்த பகுதியை அளந்து உரிய நடவடிக்கை எடுக்க தாசில்தார் உத்தரவிட்டார்.

1 More update

Next Story